காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டிக் கொலை - சென்னையில் பயங்கரம்!

ஜூலை 12, 2018 712

சென்னை (12 ஜூலை 2018): சென்னையில் காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடியில் கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவர் நேற்றிரவு திருவான்மியூர் காவல் நிலையம் அருகே சுமார் 9:30 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாதவர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்த திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தனசேகர் சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் என்றும் கடந்த 2013-ஆம் ஆண்டு இவர் மீது துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.

மேலும் முதற்கட்ட விசாரணையில் தனசேகரை கொலை செய்தவர்கள் வெள்ளை சங்கர், முத்து என தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனசேகருக்கும் கொலை செய்தவர்களுக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...