மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை திறக்க அனுமதி!

July 12, 2018

மதுரை (12 ஜூலை 2018): மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் தீயில் எரிந்து சாம்பல் ஆகியது. மேலும் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபமும் பெருமளவு சேதமடைந்தது. இதனையடுத்து மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ராஜ்நாகுலு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்கலாம் என்றும் டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே கடைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!