கோவை மாணவி பலியானது தொடர்பாக உடனடி விசாரணைக்கு உத்தரவு: வீடியோ!

July 13, 2018

கோவை (13 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பயிற்சியாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.

கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் லோகேஸ்வரி என்ற மாணவியும் கலந்து கொண்டார். இவர் 2வது மாடியில் இருந்து குதிக்க தயாராக இருந்தார். கீழே மாணவர்கள் வலையுடன் கீழே காத்திருந்தனர்.

அப்போது அருகிலிருந்த பயிற்சியாளர் மாணவியின் இடுப்பில் கயிறு கட்டாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் கீழே தள்ளிவிட்டார். இந்த சூழலில் விழும் போது, எதிர்பாராதவிதமாக சன்ஷேடில் அடிபட்டு வலையில் விழுந்தார். இதில் லோகேஸ்வரி படுகாயமடைந்தார்.

இதையடுத்து முதலுதவி சிகிச்சை அளித்த அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பயிற்சியாளரை போலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் மாணவி பலியானது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!