கோவை மாணவி மரணத்தில் வெளியாகியுள்ள பல திடுக்கிடும் தகவல்கள்!

ஜூலை 13, 2018 1208

கோவை (13 ஜூலை 2018): கோவையில் பேரிடர் மேலாண்மை பயிர்ச்சியின்போது மாணவி மரணமடைந்த விவகாரத்தில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் லோகேஸ்வரி என்ற மாணவியும் கலந்து கொண்டார். இவர் 2வது மாடியில் இருந்து குதிக்க தயாராக இருந்தார். கீழே மாணவர்கள் வலையுடன் கீழே காத்திருந்தனர்.

அப்போது அருகிலிருந்த பயிற்சியாளர் மாணவியின் இடுப்பில் கயிறு கட்டாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் கீழே தள்ளிவிட்டார். இந்த சூழலில் விழும் போது, எதிர்பாராதவிதமாக சன்ஷேடில் அடிபட்டு வலையில் விழுந்தார். இதில் லோகேஸ்வரி படுகாயமடைந்தார்.

இதையடுத்து முதலுதவி சிகிச்சை அளித்த அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பயிற்சியாளரை போலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை தள்ளிவிட்ட பயிற்சியாளர் ஆறுமுகம் குறித்த சில முக்கியமான தகவல்கள் வெளியாகி. அவரை கோவை போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

அதன்படி, கோவை மாணவியின் மரணத்திற்கு காரணமான ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் இல்லை.கைதான ஆறுமுகம் மத்திய மாநில அரசின் ஊழியர் கிடையாது.பேரிடர் மேலாண்மை பற்றி முறையாக அவர் பயிற்சி பெறவில்லை. மாற்றுத்திறனாளி ஆறுமுகம் எப்படி பயிற்சியாளர் ஆனார் என்று விசாரணை நடக்கிறது. ஆறுமுகம் பணி செய்ய அளித்த ஆவணங்கள் எல்லாம் போலியானது என்று கூறப்படுகிறது. அதேபோல் அவரது வீட்டு முகவரி கூட தவறானது என்றும் கூறியுள்ளனர்.

ஆறுமுகத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. 2017ல் ஒரு முறையும், 2018 ஜூலை 3ம் தேதியும் கோவை கல்லூரியில் அனுமதி கோரி கடிதம் கொடுத்துள்ளார். கடைசியாக தற்போது வீடியோ காட்டி, கல்லூரியில் பயிற்சி அளிக்க வந்துள்ளார். இவருடன் வந்த நபர்கள் குறித்தும் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இதை குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...