கோவில் திருப்பணியில் முறைகேடு - 6 பேர் மீது வழக்கு!

ஜூலை 15, 2018 442

காஞ்சி (15 ஜூலை 2018): காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலை புதுப்பிப்பதற்காக கடந்த 2014-ம் தமிழக அரசு மாளிகையின் மேல் பகுதியை சீரமைக்க ரூ.79.90 லட்சமும், கீழ்பகுதி மாளிகையை சீரமைக்க ரூ.65 லட்சமும் நிதி ஒதுக்கியது. இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோயிலின் பக்த ரான டில்லிபாபு என்பவர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் இரட்டை திருமாளிகை புதுப்பிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, கூடுதல் திருப்பணி ஆணையர் கவிதா உட்பட 6 பேர் மீது புகார் அளித்தார்.

டில்லிபாபு புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் காவல்துறை தரப்பில் எடுக்கவில்லை என்பதால் டில்லிபாபு காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் மன்றம் 1-ல் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மீனாட்சி, புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிவகாஞ்சி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி , ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசன், பொறியாளர் பாலசுப்பிரமணியம் , ஸ்தபதி மாமல்லபுரம் நந்தகுமார் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காஞ்சி போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...