ஷாலினி மரணம் - முதல்வர் இரங்கல்!

ஜூலை 16, 2018 2050

சென்னை (16 ஜூலை 2018): தனியார் தொலைக்காட்சி ஷாலினி விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஷாலினி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் வசிக்கும் சக ஊழியரை பார்த்துவிட்டு, ஷாலினி உள்ளிட்ட 5 பேர் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கொடைரோடு என்ற இடத்தில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் ஷாலினி, விபத்தில் பலத்த காயமடைந்ததால் வழியிலேயே உயிரிழந்தார்.

ஷாலினியின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான ஈரோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாலினியின் பிறந்தநாளன்றே அவர் உயிரிழந்தது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஷாலினி உயிரிழப்பிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பாஜக தலைவர் தமிழை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஷாலினியின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...