பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் திடீர் பரபரப்பு!

ஜூலை 16, 2018 936

கொல்கத்தா (16 ஜூலை 2018): பிரதமர் மோடி கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் கூடாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்காளம் மாநிலம் மிண்டாபூரில் இன்று பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவர் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போதே, பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

இதில், பலர் சிக்கிக்கொண்டனர். உடனே, தனது பிரத்யேக பாதுகாவலர்களிடம் மக்களை பத்திரமாக மீட்குமாறு மேடையில் இருந்தே மோடி உத்தரவிட்டார். 15-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து, நேராக மருத்துவமனைக்கு சென்ற மோடி காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...