ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு ஜமாத்துல் உலமா சபை சார்பில் கவுரவம்!

ஜூலை 16, 2018 543

திருச்சி (16 ஜூலை 2018): ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சுமார் 150 பேர் திருச்சி ஜமாத்துல் உலமா சபை சார்பில் கவுரவிக்கப் பட்டார்கள்.

திருச்சி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை, எம்.எல் எஸ் ஆகியோர் இணைந்து திருச்சி மாவட்டத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்லும் 150 பேருக்கு சால்வை அணிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் கவுரவித்து அவர்களை வாழ்த்தி பேசினார்.

திருச்சி மாவட்டத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் அரசு மற்றும் தனியார் டிரவால்ஸ் மூலம் 150 பேர் பயணம் செல்கிறார்கள். அவருக்கு வழியனுப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி தைலா சில்க்ஸ் அருகே உள்ள பெரிய சவுக் ஜாமியா மஸ்ஜித்தில் நடைபெற்றது. விழாவுக்கு எம்.எல்.எஸ். தலைவர் முனைவர் ஹாஜி எம்.கே. முஹம்மது உஸ்மான் தலைமை வகித்தார். கூட்டத்தை பெரிய சவுக் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அல்ஹாஜ் சையத் தஸ்தகீர் காதிரி கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார். எம்.எல்.எஸ். பொதுச்செயலாளர் மற்றும் திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை தலைவர் கவிஞர் கா. சையது ஜாஃபர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

எம்.எல்.எஸ். துணைத் தலைவர் டாக்டர் எம்.ஏ. அலீம், திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை கௌரவ தலைவர் வக்கீல் ஜி.எஸ்.ஏ. மன்னான், மாவட்ட பொருளாளர் ஹாஜி எம். சிராஜுதீன், எம்.எல்.எஸ். பொருளாளர் அல்ஹாஜ் வக்கீல் முஹம்மது ஜலாலுதீன், எம்.எல்.எஸ். துணைச் செயலாளர் பி.எம். முஹம்மது இக்பால் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை பொதுச்செயலாளர் ஹாஜி எம். அப்துல் வஹாப், திருச்சி இ.பி. ரோடு இலாஹி பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஹாஜி பி.கே.எம். அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாநகர மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மற்றும் திருச்சி தனரத்தினம் நகர் மக்கா மஸ்ஜித் பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மவ்லவி முஹம்மது சிராஜுதீன் ஃபாஜில் மன்ப ஈ ஹஜ்ஜின் சிறப்புகள் என்ற தலைப்பில் பல்வேறு கருத்துகளையும் ஹஜ்ஜின் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மற்றும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் ஹாஜி மவ்லவி முப்தி ஏஸ்.ஏ.எச். உமர் பாரூக் மழாஹரி ஹஜ்ஜின் வழிமுறைகள் என்ற தலைப்பில் பேசியதாவது : புனித ஹஜ் எப்படி செய்வது அதன் வழிமுறைகள் எப்படியெல்லாம் செய்தால் புனித ஹஜ் முழுமையாக பயன் அடைய முடியும் என்பதை விளக்கமாக எடுத்து பேசினார்.

திருச்சி மாநகர மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மற்றும் முஹம்மது பூரா மஸ்ஜித் ஜமா அத் பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மவ்லவி இ. முஹம்மது ஷரீப் யூசுபி மதினாவின் சிறப்புகள் என்ற தலைப்பில் பல்வேறு கருத்துகளையும் மதினாவின் என்னன்ன சிறப்புகள் இருக்கிறது என்பதையும் பற்றி விளக்கமாக எடுத்து பேசினார்.

மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் டிரவால்ஸ் மூலம் ஆண்கள் 70 பேரும், பெண்கள் 80 பேரும் ஆகிய 150 பேர்கள் செல்கிறார்கள் அவர்களுக்கு திருச்சி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை, எம்.எல் எஸ் ஆகியோர் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் சல்வை அணிவித்து பேசியதாவது: புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 150 பேருக்கும் கிடைத்த பொக்கிஷமாக நினைத்து அல்லாவிடம் இடத்துக்கு சென்று ஆசி வாங்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்து உள்ளது. இதை பயன்படுத்தி நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டுக்காவும் அனைத்து மக்களும் நீங்கள் து ஆ செய்ய வேண்டும். அது தான் முதல் கடைமையாக நினைத்து செய்யவேண்டும்.197 நாடுகளில் இருந்து இந்த மக்கா மதினாவை நோக்கி வருவார்கள். யாரெல்லாருக்கு எல்லாம் இந்த பாக்கியம் கிடைத்து இருக்கிறோதோ அவர்களுக்கு மட்டும் தான் இந்த புனித ஹஜ் பயணம் பாக்கியம் கிடைத்துள்ளது. எனவே எங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அனைவரும் து ஆ செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் பேசினார்.

விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம். ஹுமாயூன், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அப்துல் முத்தலிப், திருச்சி மண்டல யூத் ஓருங்கிணைப்பாளர் என்.கே. அமீருதின், திருவெறும்பூர் தொகுதி துணை அமைப்பாளர் அரியமங்கலம் முஸ்தபா, மாவட்ட பிரதிநிதி டைலர் சர்புதீன், திருச்சி தென்னூர் பள்ளிவாசல் தலைவர் அக்பர் அலி, ஓய்வு பெற்ற உதவி ஆடசியர் சாகுல் ஹமீது, ஓய்வு பெற்ற தாசில்தார் அம்சத் இப்ராஹிம், ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, மற்றும் திருச்சி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை, எம்.எல் எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இறுதியில் எம்.எல்.எஸ். இணைச் செயலாளர் மற்றும் ஜமால் கல்லூரி தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் சையத் ஜாகீர் ஹசன் நன்றி கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...