நீட் தேர்வு கருணை மதிப்பெண் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு!

ஜூலை 16, 2018 631

புதுடெல்லி (16 ஜூலை 2018): நீட் தேர்வு தமிழில் கேள்வி குளறுபடியாக இருந்த நிலையில் கருணையின் அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்க பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

‘மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும், மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. இதனையடுத்து மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே சிபிஎஸ்இ சுப்ரீம் கோர்ட்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி.கே.ரங்கராஜன் சி.பி.எஸ்.இ. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் அதனை விசாரிக்கும்போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது கேவியட் மனு தாக்கல் செய்தார்.

இப்போது ஐகோர்ட்டு உத்தரவிற்கு எதிராக செய்யக்கோரி சி.பி.எஸ்.இ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2018–ம் ஆண்டு நீட் தேர்வுக்கான தகவல் தொகுப்பு குறிப்பில் ‘மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 மொழிகளில் வினா புத்தகம் வழங்கப்படும். ஒன்று மாநில மொழியிலும், மற்றொன்று ஆங்கிலத்திலும் இருக்கும். மாநில மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு, கேள்வி மொழிபெயர்ப்பில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆங்கிலத்தில் உள்ளதை பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் தான் இறுதியானதாக கருதப்படும்’ என சிபிஎஸ்இ மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...