இப்போதைக்கு குற்றாலம் போறவங்களா? அப்படின்னா இதை படிங்க!

July 17, 2018

தென்காசி (17 ஜூலை 2018) : குற்றாலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழையின்போது ஜூன் மாதத்தில் குற்றால சீசன் களை கட்டும். தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குற்றாலம் மலைப் பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இன்று காலையிலும் மலைப் பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக சுற்றுலாபயணிகள் 3-வது நாளாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஐந்தருவியிலும் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கவில்லை.

பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. புலியருவியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுவதால், அங்கு கூட்டம் அலைமோதுகிறது. குற்றாலத்தில் சாரல் மழையுடன் காற்று வேகமாக வீசுகிறது. இதமான சூழல் நிலவியபோதிலும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!