சென்னையில் சிறுமியை வன்புணர்வு செய்து கொன்றவர்கள் மீது தாக்குதல்!

ஜூலை 17, 2018 546

சென்னை (17 ஜூலை 2018): சென்னையில் 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்தவர்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

சென்னையில் அயனாவரத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த 50 பேரிடம் விசாரணை நடத்தி அடுத்து, 24 பேரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 12 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மகிளிர் நீதிமன்றத்தில் 17 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்க கொண்டு செல்லும் போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் அவர்கள் மீது தக்குதல் நடத்தினர்.

முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் ஜூலை 31 ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...