ஆன்மீக சுற்றுலா வந்த ரஷ்ய பெண் தமிழகத்தில் கூட்டு வன்புணர்வு!

ஜூலை 17, 2018 662

திருவண்ணாமலை (17 ஜூலை 2018): ஆன்மீக சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு பெண் திருவண்ணாமலையில் வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்யப் படடுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஷ்யாவிலிருந்து திருவண்ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு வந்த 21 வயதுடைய பெண்ணை அடையாளம் தெரியாத 5 நபர்கள் வன்புணர்வு செய்துள்ளனர். இதில் சுயநினைவை இழந்த அப்பெண் நேற்று இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பெண்ணை திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி இன்று நேரில் பார்வையிட்டு மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நீதிபதி , இந்த சம்பவம் தமிழக மக்களிடையே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து இதுவரை காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை எனவும் விசாரணையை தீவிரப்படுத்தி உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு தொகை நாளை அல்லது நாளை மறுதினம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். சுயநினைவை இழந்த அந்தப் பெண் ரஷ்ய மொழி மட்டும் பேசுவதால் ரஷ்ய மொழி பேசக் கூடிய ஒரு நபரை கொண்டு விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...