இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.எல்.ஏ அபூபக்கருக்கு கவுரவம்!

ஜூலை 20, 2018 502

கொழும்பு (20 ஜூலை 2018): இலங்கை நாடாளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கருக்குன் கவுரவம் அளிக்கப் பட்டதோடு நாடாளுமன்ற அவை குறிப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. இலங்கை பாராளுமன்ற நடவடிக்களை பார்வையிட்ட வந்தமைக்கு சபாநாயகர் மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் தங்கள் உரையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் அவர்களை வரவேற்று வாழ்த்தி உரையாற்றினார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் பெயர் சிறிலங்கா பாராளுமன்றத்தின் அவை குறிப்பில் இடம்பெற்றுள்ளது என்பது வரலாற்று சிறப்புமிக்கது. ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், மாநில துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி, திருச்சி மாவட்ட மணிச்சடர் நாளிதழின் செயலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் வருகை தந்தார். பின்னர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீமை சந்தித்து பல்வேறு அரசியல் குறித்து மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் பேசினார்.

இலங்கை பாராளுமன்ற நடவடிக்கை பார்க்க ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் அழைத்தார். அதை ஏற்றுக் கொண்டு புதன்கிழமை நண்பகல் பாராளுமன்றத்தில் உள்ள அலுவலகத்திற்க்கு வருகை தந்தார். பின்னர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடும் நிகழ்வு பாராளுமன்ற குழு அறையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சு மற்றும் கட்சி பிரதியமைச்சர்களின் அமைச்சுகள் மூலமாக, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் மேற்கொள்ள முடியுமான அபிவிருத்தி திட்டங்களை செய்துகொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், பிரதமரின் ‘கம்பெரலிய’. வேலைத்திட்டத்தை தங்களது ஊர்களில் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப்பாதையில் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டன. உள்ளூராட்சி மற்றும் மாநகர கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ எம். முஹம்மது அபுபக்கர் பேசினார்.

இந்த கூட்டத்தில் புத்தளம், கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி, மாத்தளை, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், கேகாலை, மாத்தறை, பொலன்னறுவ, களுத்துறை, நுவரெலிய, ஆகிய மாவட்டங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் பாராளுமன்ற நடவடிக்கைகளை சபாநாயகர் மடத்தில் இருந்து பார்வையிட்டார். பின்னர் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன்தமிழகத்தில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் இலங்கை பாராளுமன்ற நடவடிக்களை பார்க்க வந்தமைக்கும் உங்களை வரவேற்பதாக கூறினார். பின்னர் பாராளுமன்றத்தில் இருந்த எம்.பிக்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் வரி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஓரு சில எம்.பிக்கள் குறுக்கியிட்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னர் தமிழகத்தில் இருந்து வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் பாராளுமன்ற நடவடிக்கைகளை மடத்தில் இருந்து பார்வையிட்டு வருகிறார். அவரை நானும் வரவேற்கிறேன் என்று கூறினார். பின்னர் இந்த அவையில் இருந்த எம்.பிக்கள் அனைவரும் கைத்தட்டி வயவேற்றார்கள். பின்னர் மடத்தில் இருந்து பார்வையிட்ட மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் சைகை மூலம் நன்றி தெரிவித்தார். அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, திருச்சி மாவட்ட ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது , ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளராக என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான் ஆகியோர் பாராளுமன்ற நடவடிக்கைகளை சபாநாயகர் மடத்தில் இருந்து பார்த்தார்கள்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் பெயர் சிறிலங்கா பாராளுமன்றத்தின் அவை குறிப்பில் இடம்பெற்றுள்ளது என்பது வரலாற்று சிறப்புமிக்கது.

கொழும்பில் உள்ள மேங்கே டிரீ உணவகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கருக்கு இலங்கை ஆக்ஸ்போர்டு எலிவேட்டர்ஸ் கம்பெனிசார்பில் புதன்கிழமை இரவு திருச்சிஅய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொருளாளர் கீழக்கரை ஹாஜி ஏ.கே அகமது குத்புத்தீன் ராஜா சால்வை அணிவித்து வரவேற்றார். இலங்கை நவமணி நாளிதழின் ஆசிரியர் மற்றும் ஶ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவர் என்.எம். ஆமீன், இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்ச ஊடகத்துறை செயலாளர் .சித்திக் ஷிஹான், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, கீழக்கரை சையது ஷகாபுத்தீன், கீழக்கரை ரபி அகமது கான். முகம்மதுரோஷன் அக்தர். ஆகியோர் உடனிருந்தனர்.

இலங்கை கொழும்பில் உள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் இல்லத்திற்க்கு சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் மணிச்சடர் நாளிதழின் சார்பில் மஹல்லா ஜமாஅத் மாண்பைக் காப்போம் என்ற ரமலான் சிறப்பு மலர் மற்றும் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள் அடங்கிய நூலையும் வழங்கினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதியமைச்சர்கள் அலிஷார் மௌலானா, பைசல் காசிம், எச்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் நஸீர், தௌபி, எம்.ஜ. மன்சூர், அமைச்சரின் ஊடக செயலாளர் டாக்டர் ஹபீஸ், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் தலைவர், நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ், விடிவெள்ளி ஆசிரியர் பைரோஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைச் செயலாளர், இப்ராஹிம் மக்கி, ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீதுஉள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தகவல் இலங்கையிலிருந்து நிருபர் ஷாகுல் ஹமீது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...