ஜவாஹிருல்லாவை ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் விசாரிப்பு!

ஜூலை 20, 2018 648

சென்னை (20 ஜூலை 2018): மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாவை திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

மமக தலைமை நிலைய செயலாளர் மாயாவரம் அமீன் வெளியிடும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆர்டோமெட் மருத்துவமனையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்களுக்கு இரு கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் சுபைர் கான் மற்றும் பக்ருதீன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு தேவையான இயன்முறை பயிற்சிகளை அவர் மருத்துவமனையில் செய்து வருகிறார். மருத்துவமனையில் நேற்று (ஜூலை 19) திமுகவின் செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு க ஸ்டாலின் பேராசியர் ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்து நலன் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ரஹ்மான் கான், அ. ராசா மற்றும் ஏ. வ. வேலு ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...