மோடி அலை ஓய்ந்தது - இன்று ராகுலின் புயல் அடித்தது!

ஜூலை 20, 2018 764

புதுடெல்லி (20 ஜூலை 2018): என்னை நீங்கள் பப்பு என்று கேவலப்படுத்தினாலும் நான் உங்களை நான் ஒரு முறை கூட மோசமாக பேசியது கிடையாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இன்று ஒன்றிய அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது ராகுல் காந்தி பேசிய பேச்சு உலக அளவில் ட்ரண்ட் ஆகி வருகிறது. அப்போது மோடி தன்னை பப்பு என்று பேசியதற்கு நாகரீகமான முறையில் மோடிக்கு பாடம் நடத்தியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மோடி பிரதமராக பதவியேற்றது முதலே ராகுலை பச்சா என்றும், பப்பு என்றும் கிண்டலடித்து பேசி வந்தார். இவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக இன்று ராகுல் தனது பேச்சால் மோடியை திணறடித்தார்.

குறிப்பாக என்னை நீங்கள் பலமுறை பப்பு என்று கேவலப் படுத்திய போதும் நான் நாகரீகமாக நடந்து கொண்டுள்ளேன், இன்றும் உங்கள் மீது மரியாதை வைத்துள்ளேன் என்று பேசியவர், மோடி ஆட்சியின் குளறுபடிகளை விளாசித் தள்ளினார். பெண்கள் பாதுகாப்பு, மோடியின் வெளிநாட்டுப் பயணம், பாதுகாப்பு அமைச்சகத்தின் ரஸ்பேல்ஸ் விமான ஒப்பந்தம், நாட்டின் பொருளாதார நிலை என பல கோணங்களில் ராகுலின் பேச்சு அமைந்திருந்தது.

ராகுலின் பேச்சால் குழப்பத்தில் அமர்ந்திருந்த மோடியைப் பார்த்து என் கண்ணைப் பார்த்து பேசுங்கள் நீங்கள் அதற்கு தயாரில்லை என்றும் ராகுல் பேசினார். பேச்சின் முடிவில் மோடியை கட்டித் தழுவியதுதான் இன்றைய ஹைலைட்.

ராகுலின் இந்த நடவடிக்கையால் உலகில் ராகுல் காந்தி ட்ரெண்டாகி வருகிறார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...