மதுரை அருகே 13 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் வன்புணர்வு!

ஜூலை 21, 2018 1263

மதுரை (21 ஜூலை 2018): மதுரை அருகே 13 வயது சிறுமியை ஒய்வு பெற்ற காவல்துறை சிறப்பு ஆய்வாளர் வன்புணர்வு செய்துள்ளார்.

மதுரை ஆத்திகுளம் பகுதியில் வசித்து வருபவர் திரவியம். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு ஆய்வாளர். இவரது பக்கத்து வீட்டு பெண்ணுக்கு வயது 13. கடைக்கு சென்றுவிட்டு இன்று மதியம் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் அந்த சிறுமி. அப்போது சார்பு ஆய்வாளர் வீட்டை தாண்டி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது சார்பு ஆய்வாளர் அந்த சிறுமியை கையை பிடித்து வீட்டுக்குள் இழுத்து கொண்டு போய்விட்டார். மேலும் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார்.

சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த அவர்கள், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து பார்த்தபோது, அந்த அதிகாரி சிறுமியை சின்னா பின்னமாக்கிக் கொண்டு இருந்தார்.

உடனடியாக சிறுமியை மீட்டுக்கொண்டனர். அத்துடன், அந்த அதிகாரியை அங்கேயே சரமாரியாக வெளுத்து கட்டினர். உடனடியாக போலீசுக்கும் தகவல் அளித்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு டிஎஸ்பியே விரைந்து வந்தார். மிகப்பெரிய தண்டனை தந்தே தீர வேண்டும் என்று ஆத்திரத்துடன், அந்த அதிகாரியை தல்லாகுளம் டிஎஸ்பியிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அந்த சிறுமி சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

வட மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து நடைபெறும் சிறுமிகள் வன்புணர்வு தமிழகத்தில் தினமும் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரு காவல்துறை அதிகாரியே இந்த ஈன செயலில் ஈடுபட்டிருப்பது நாடு எந்த திசையில் போய்க் கொண்டிருக்கிறது? என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...