புதுச்சேரியில் இளம் பெண் ஏழுபேரால் கூட்டு வன்புணர்வு!

ஜூலை 22, 2018 574

புதுச்சேரி (22 ஜூலை 2018): புதுச்சேரியில் 16 வயது சிறுமி ஏழு பேரால் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டுள்ளார்.

புதுச்சேரியில் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமியுடன், திருக்கனூரை சேர்ந்த விக்கி என்ற இளைஞருக்கு பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்றபோது, அவரை அருகில் உள்ள தோப்பிற்கு விக்கி அழைத்து சென்றுள்ளார். அங்கு விக்கி மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமி தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் திருக்கனூர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். புதுச்சேரி எல்லை பகுதியில் பதுங்கியிருந்த விக்கி, முகிலன், கண்ணதாசன், சூர்யா, தேவா ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் அனைவரும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமை ஆனவர்கள் என்பதும், சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து இருப்பதும் தெரிய வந்தது. தலைமறைவான எஞ்சிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...