கோவையில் சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை!

ஜூலை 23, 2018 511

கோவை (23 ஜூலை 2018): கோவையில் சிறப்பு காவல்படை காவலர் அமர்நாத் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் கடந்த 2016ம் ஆண்டு சிறப்பு காவல்படையில் சேர்ந்தார். இந்நிலையில் நேற்று பணி முடிந்த பிறகு கோவை அருகே புதூரில் உள்ள அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று தூக்கியிட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து இன்று காலை தூங்கில் தொங்கிய நிலையில் அமர்நாத்தை பார்த்த சக காவல்படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சமீபமாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் காவல்துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏறபடுத்தி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...