தாயின் கள்ளக் காதலை பார்த்த மகனை தாயே கொலை செய்த கொடுமை!

ஜூலை 23, 2018 1076

திருச்சி (23 ஜூலை 2018): தாய் கள்ளக் காதலனுடன் இருப்பதை மகன் பார்த்து விட்டதால் ஆத்திரமடைந்த தாய் மகனையே கொலை செய்த கொடுமை திருச்சி அருகே நடந்துள்ளது.

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதி சாந்தபுரம். இங்கு கட்டிட தொழிலாளியாக இருப்பவர் மீனாம்பாள். 40 வயதாகிறது. இவரது கணவர் கேன்சர் வந்து 6 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு அங்குராஜ் என்ற மகன். 14 வயதான அவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்குராஜ், வீட்டில் மயங்கி வீழே விழுந்துவிட்டதாக கூறி அவனை தூக்கிக் கொண்டு மீனாம்பாள் மற்றும் அவரது தோழி லட்சுமி ஆகியோர் மருத்துவமனைக்கு பதறியடித்து கொண்டு சென்றார்.

ஆனால் டாக்டர்கள் அங்குராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து உடலை வீட்டுக்கு எடுத்து வந்து சடங்குகள் செய்ய தாய் மீனாம்பாள் தாயாராகியுள்ளார்.

இந்நிலையில் அங்குராஜ் சாவில் மர்மம் இருப்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மீனாம்பாள் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த அங்குராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அங்குராஜ் கழுத்து நெறிக்கப் பட்டு கொலை செய்யப் பட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து தாய் மீனாம்பாளிடம் நடத்திய விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொத்தனார் வேலை செய்யும் முத்தழகு என்ற முத்தையனுடன் மீனாம்பாளுக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. அதனால் முத்தையனை வீட்டுக்கு வரவழைத்து இருவரும் தண்ணி அடித்துவிட்டு, பின்னர் ஜாலியாக இருந்துள்ளனர். இரண்டாவது இடி. மீனாம்பாள் போதாமல் முத்தையனுக்கு இன்னொரு கள்ளக்காதலி இருக்கிறாராம். அவர்தான் மீனாம்பாள் தோழி லட்சுமி. இவரும் வீட்டுக்கு வருவாராம். 3 பேரும் தண்ணி அடித்துவிட்டு, 3 பேரும் ஒன்றாகவே ஜாலியாக ஒரே வீட்டில் இருந்துள்ளனர்.

தாய் செய்யும் தவறை மகன் தன் கண்ணாலேயே பார்த்துவிட்டான். இதனால் அம்மாவின் செயலால் மன உளைச்சல் ஏற்பட்டு அங்குராஜ் பலமுறை அழுதிருக்கிறான். அம்மாவை வெறுக்கவும் முடியாமல், கண்டிக்கவும் வயதில்லாமல், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறி, அம்மாவை திருத்த சொன்னான்.

இதனால் ஆத்திரம் அடைந்த மீனாம்பாள் அங்குராஜை தீர்த்துக் கட்ட முடிவு செய்தாள்.அதன்படி அங்குராஜ் தூங்கபோகும்போது, குடிக்கும் பானம் ஒன்றில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து மீனாம்பாள் குடிக்க சொன்னார். அம்மா கொடுத்ததால் பேசாமல் வாங்கி குடித்துவிட்டு தூங்க சென்றுவிட்டான் மகன். சிறிது நேரம் கழித்து, மீனாம்பாளும், லெட்சுமியும் அங்குராஜ் கழுத்தை கயிற்றால் நெரித்தனர். மேலும் கள்ளக் காதலனை வைத்து மகனை கொலை செய்தார். பிறகுதான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தினருக்கு இந்த மரணத்தில் சந்தேகம் எழ்வே போலீசுக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளியானது. இதனை அடுத்து மீனாம்பாள் தோழி லெட்சுமி, மற்றும் முத்தழகு ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...