சொத்து வரி நூறு சதவீதமாக உயர்வு!

ஜூலை 23, 2018 555

சென்னை (23 ஜூலை 2018): சொத்து வரியை 50 லிருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் 1998-க்கு பிறகு சொத்துவரி மாற்றி அமைக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சொத்துவரியை உயர்த்த பலமுறை பரிந்துரை வழங்கியும் சொத்து வரியில் மாற்றம் செய்யவில்லை. இதனால் 1998-ம் ஆண்டிலிருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்விவகாரத்தில் 2 வாரங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சொத்துவரி மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர மாநகராட்சியில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50% வரை சொத்துவரியும், இதர மாநகராட்சி குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 50% மிகாமல் சொத்துவரி உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கான வாடகை 100%-க்கு மிகாமல் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100%-க்கு மிகாமல் சொத்துவரி உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...