சென்னையில் மின்சார ரெயிலில் படிகட்டில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் பலி!

ஜூலை 24, 2018 605

சென்னை (24 ஜூலை 2018): சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலின் படிகட்டில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை கடற்கரை- திருமால்பூர் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்துள்ளனர். இதில் பலர் பலத்த காயம் அடைந்து அதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயம் அடைந்தவர்களை மீட்டு ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக மருத்துவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முன்னதாக நேற்றிரவு பரங்கிமலையில் மின்கம்பத்தில் மோதி ரயிலில் பயணித்த பயணிகள் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...