சிறுமி வன்புணர்வு வழக்கில் மேலும் மூவர் கைது!

ஜூலை 24, 2018 612

புதுச்சேரி (24 ஜூலை 2018): புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை வழுதாவூரைச் சேர்ந்த விக்கி என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி அச்சிறுமியை அருகில் உள்ள தோப்பிற்கு அழைத்து தனது நண்பர்களுடன் இணைந்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளான். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்தான்.

இது குறித்து குழந்தைகள் நலக்குழு அளித்த புகாரின் படி சிறுமியின் காதலன் விக்கி உள்பட 5 பேர் மீது திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடைய கலை, அசோக் மற்றும் சூர்யா ஆகியமேலும் மூன்று பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...