ஏடிஎம்மில் அனாதையாக கிடந்த ரூ 45 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த மாணவர்கள்!

ஜூலை 25, 2018 589

அதிராம்பட்டினம் (25 ஜூலை 2018): அதிராம்பட்டினத்தில் ஏ.டி.எம்மில் அனாதையாக கிடந்த ரூ 45 ஆயிரத்தை கண்ட இரண்டு மாணவர்கள் அதனை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் அப்சர் இவரது நண்பர் சுபைது இருவரும் அதிராம்பட்டிணம் இந்தியன் வங்கியில் ஏடிஎம் ல் பணம் டெபாசிட் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது டெபாசிட் மெசினில் பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அதனை எடுத்துக்கொண்டு அராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தனர். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட தலைமைக் காவலர் பாலசுப்ரமணியன் இந்தியன் வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்.

இதனை அடுத்து இந்தியன் வங்கி மேலாலர் நடத்திய விசாரணையில் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவரது பணம் என்பது வங்கி மேலாளர் ராஜசேகருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து மேலாலர் அவரிடம் பணத்தை ஒப்படைத்தார். மேலும் நேர்மையுடன் செயல்பட்ட இரண்டு பள்ளி மாணவர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் வங்கி மேலாளர் ராஜசேகர் ஆகியோர் பாராட்டினார். மேலும் பொதுமக்களிடமும் மாணவ்ர்களுக்கு பாராட்டு குவிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...