திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

ஜூலை 25, 2018 500

சென்னை (25 ஜூலை 2018): சொத்து வரி உயர்வைக்கண்டித்து திமுக சார்பில் வரும் ஜூலை 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது.

மேலும் சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், அவற்றை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக சார்பில் ஜூலை 27ம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊழலில் திளைக்கும் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 3,500 கோடி நிதி இன்னும் பெறப்படாமல் உள்ளது. மத்திய அரசின் மானிய உதவி தொகைகளை பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல், வாடகைதாரர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிப்படையும் வகையில் அதிமுக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது என்றும் அதனால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...