ஓ.பன்னீர் செல்வம் சொன்னதைக் கேட்டால் தலை சுத்திடும்!

ஜூலை 25, 2018 1090

சென்னை (25 ஜூலை 2018): டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என தெரிவித்தார்.

துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் மற்றும் பலருடன் டெல்லிச் சென்றார். இன்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஓ.பன்னீர் செல்வத்தின் டெல்லி பயணம் குறித்து பேட்டி அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது சகோதரர் சிகிச்சைக்காக தனி விமானம் கொடுத்து உதவியதற்காக மத்திய அமைச்சருக்கு, நன்றி தெரிவிக்கவே ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார் என கூறினார்.

ஆனால் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்.பி மைத்ரேயனை மட்டுமே சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். ஓபிஎஸ் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திடம், நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்ததாக வெளியான தகவல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...