நடிகர் அஜீத் ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக் கொலை!

ஜூலை 26, 2018 526

சேலம் (26 ஜூலை 2018): சேலத்தை சேர்ந்த நடிகர் அஜீத்தின் ரசிகர் மன்ற தலைவர் மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் விஜய் (வயது 28). இவர் நடிகர் அஜீத் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். இவர் ராம்நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு தகர கூடாரத்தில் அமர்ந்து நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது விஜயை 4 பேர் கும்பல் சூழ்ந்து நின்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேர் யார்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தப்பி ஓடியவர்களில் ஒருவர் சின்ன திருப்பதியை சேர்ந்த ரகுல்ராஜ் என்பதும் கொலையுண்ட விஜயின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது.

விஜயிடம் ரகுல் ராஜ் பணம் வாங்கி உள்ளார். இந்த பணத்தை திருப்பி தருமாறு விஜய் கேட்டுள்ளார். இதனால் ரகுல் ராஜ் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனை தொடர்ந்து விஜய், ரகுல் ராஜின் வீட்டிற்கு சென்று உறவினர் மத்தியில் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரகுல்ராஜ் பணம் தருவதாக கூறி விஜயை ராம் நகருக்கு அழைத்துள்ளார். அங்கு மது அருந்தும் போது அவரை, ரகுல்ராஜ் கூட்டாளிகளுடன் சேர்ந்த துடிக்க துடிக்க கொலை செய்தார் என்பது தெரியவந்தது

தலைமறைவாக உள்ள ரகுல்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...