கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஒன்றிய அரசு தயார் - மோடி!

ஜூலை 27, 2018 455

புதுடெல்லி (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியின் மருத்துவ தேவைகளுக்கு உதவ ஒன்றிய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் உடல் நலம் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.

இந்நிலையில், கருணாநிதி உடல்நலன் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘திமுக தலைவர் கருணாநிதி உடல்நலன் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். அவர், விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் வழங்க எந்நேரமும் மத்திய அரசு தயாராக உள்ளது’ என மோடி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...