கண்ணீர் வடித்த ஸ்டாலின்!

ஜூலை 28, 2018 798

சென்னை (28 ஜூலை 2018): நேற்று நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண் கலங்கினார்.

கருணாநிதி வீட்டில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் கருணாநிதிக்கு நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ரத்த அழுத்த குறைந்தது. இதையடுத்து அவரை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. அப்போது கருணாநிதியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிய போது ஸ்டாலின் கண்கலங்கினார்.

காவேரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள கருணாநிதியின் இரத்த அழுத்தம் சீராக உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தற்போது தெரிவித்துள்ளமை திமுக தொண்டர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...