ஓ.பி.எஸ் உடல் நலனை விசாரித்த கலைஞர்?

ஜூலை 28, 2018 1428

சென்னை (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கருணாநிதியின் உடல் நிலையில் மோசம் அடைந்ததாக வந்த தகவலை அடுத்து துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக அமைச்சர்கள் சிலர் கருணாநிதியின் கோபால புரம் இல்லத்திற்கு சென்று உடல் நலம் விசாரித்தனர்

இதனை திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு கிண்டலாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தன்னை பார்க்க வந்த ஓபிஎஸ், தங்கமணி, வேலுமணி, மற்றும் ஜெயகுமாரின் உடல் நலனை விசாரித்து அனுப்பி வைத்தார் கலைஞர்" என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...