காவேரி மருத்துவமனையில் குவியும் திமுக தொண்டர்கள்!

ஜூலை 28, 2018 913

சென்னை (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கும் காவேரி மருத்துவ மனையில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

உடல் நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக தீவிர சிகிச்சப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கும் கருணாநிதியைக் காண ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை புரிந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விசாரித்தார்.

இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து வருகிறார் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். மேலும் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்ய தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே காவேரி மருத்துவ மனையில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவரது சொந்த ஊரான திருவாரூலிருந்தும் மக்கள் சென்னையை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...