எஸ்டிபிஐ நிர்வகியை தாக்கிய போலீசாருக்கு அபராதம் விதித்து உத்தரவு!

ஜூலை 28, 2018 513

அதிராம்பட்டினம் (28 ஜூலை 2018): அதிரம்பட்டினம் எஸ்டிபிஐ நிர்வாகியை தாக்கிய போலீசார் மூவருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகியான இசட் இல்யாஸ் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு செல்லும் போது, அதிராம்பட்டினம் போலீசார் அவதூறாக பேசி வந்தனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்ததால் அவர்கள் என் மீது ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில், 01.04-2013 அன்று மோட்டார் அன்று மோட்டார் சைக்கிளில் புத்துப்பட்டினம் அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிராம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ் மோகன், கமல், ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி ஆகியோர் என்னை அவதூறாக பேசி கடுமையாக தாக்கினர். என்னிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டனர். எனவே, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக, அவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் மனுதாரருக்கு வழங்கிவிட்டு அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்' என்று உத்தரவிட்டார்.

Source : அதிரை நியூஸ்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...