கோவில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்!

ஜூலை 28, 2018 522

திருவாரூர் (28 ஜூலை 2018): திருவாரூர் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் அருகே உள்ள கிராமம் குவளைக்கால். இங்குள்ள அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.

வழிபாடுகள் முடிவடைந்ததையடுத்து, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை வாங்கி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு திடீரென வாந்தி வந்தது. சிலர் மயங்கி கீழே விழுந்தனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து பிரசாதம் சாப்பிட்டு பாதிப்பு ஏற்பட்டோர் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆடி வெள்ளியன்று பக்தர்கள் கோயில் பிரசாதம் சாப்பிட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...