என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர் - போலீஸ் மீது நடிகை புகார்!

July 28, 2018

கோவை (28 ஜூலை 2018): போலீஸ் காவலில் இருந்த போது தன்னை நிர்வாணமாக நிற்க வைத்ததாகவும், நிர்வாண நிலையிலேயே வீடியோ எடுத்ததாகவும், மேலும் தனது ஆசைக்கு இணங்குமாறும் போலீஸ் அதிகாரி தன்னை மிரட்டியதாக கண்ணீர் விட்டு கதறியபடி நடிகை ஸ்ருதி புகார் அளித்துள்ளார்.

மாட்ரிமானியல் மூலம் பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட் நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தனக்கு கோவையை சேர்ந்த காவல் உயர் அதிகாரி ஒருவர் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதனை நீதிபதியிடம் முறையிட்டும் பலனில்லை, சிறைக் காவலுக்கு சென்ற பிறகே நான் தப்பித்தேன் என்று நடிகை ஸ்ருதி தெரிவித்துள்ளார். மேலும் அந்த போலீஸ் உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அ

Search!