புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பி.ஏ. வெட்டிப் படுகொலை!

ஜூலை 28, 2018 868

புதுக்கோட்டை (28 ஜூலை 2018): புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் பி.ஏ. மர்மநபர்களால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப் பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் பி.ஏ.வாக இருப்பவர் பூபதி கண்ணன். நேற்று வழக்கம்போல் காரில் பணிக்கு சென்ற பூபதி கண்ணன் நீண்ட நேரம் ஆகியும் இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி போன் செய்து கேட்டபோது, விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவதாக பூபதி கண்ணன் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், திருச்சி மாத்தூர் அருகே உள்ள அரைவட்ட சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. நேற்று முதல் கார் அங்கேயே நின்று கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காருக்குள் சென்று எட்டி பார்த்தனர். அதில் பூபதி கண்ணன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் பூபதி கண்ணன் கொலைக்கான காரணங்கள் என்ன என்பதும் குறித்தும், விரோதிகள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...