தா. பாண்டியன் உடல் நிலை நலம்!

ஜூலை 28, 2018 640

சென்னை (28 ஜூலை 2018): இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் நல்ல உடல் நிலையில் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு, இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பின்னர் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலைக்கு மேல் தா.பாண்டியன் உடல்நிலை இயல்பான நிலைமைக்கு திரும்பினார். இதையடுத்து, ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...