முக்கிய செய்திகள்

ஜூலை 29, 2018 798

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - காவிரி மருத்துவமனை.

சிறந்த மருத்துவர்கள் குழு கருணாநிதியின் உடல்நிலையை கண்காணித்து வருவதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின் மற்றும் அழகிரி குடும்பத்தினர் அனைவரும் வருகை.
காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நேரில் கேட்டறிந்தார் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அலி.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்ற செய்தி நம்பிக்கை தருகிறது - வைரமுத்து.
சென்ற போராட்டங்களில் எல்லாம் அவர் எப்படி வென்றாரோ அதே போல் நோயையும் எதிர்த்து போராடி மீண்டு வருவார் - வைரமுத்து.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இணையதளங்களில் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது.பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்.
கருணாநிதி உடல்நிலை தேறி மீண்டும் அரசியல் தளத்தில் பணியாற்ற வேண்டும் - சீமான்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கருணாநிதி பூரண குணமடைந்து மீண்டும் மக்களை சந்திக்க வேண்டி பிரார்த்திக்கிறேன் - இல.கணேசன்.
5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு மருத்துவ உதவிக்கு அவரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால், தமிழக அரசு உதவி செய்யத் தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் பாடுபட்ட கருணாநிதி நலமடைந்து வருவது மகிழ்ச்சி - தம்பிதுரை எம்பி.
வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டதை அடுத்து தமிழகத்தில் லாரிகள் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின.
காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சு திணறல் காரணமாக கவலைக்கிடமான நிலையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி.
காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஆடிட்டர் குருமூர்த்தி.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 61,291 கனஅடியில் இருந்து 68,660 கனஅடியாக அதிகரிப்பு.நீர் திறப்பும் 60,574 கனஅடியில் இருந்து 68,498 கனஅடியாக அதிகரிப்பு.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120.3 அடியாகவும் நீர் இருப்பு 93.950 டிஎம்சியாகவும் உள்ளது 6வது நாளாக டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...