தமுமுக முயற்ச்சியால் டாஸ்மாக் கடைக்கு தடை!

ஜூலை 29, 2018 540

சேலம் (28 ஜூலை 2018): சேலம் அருகே திறக்க இருந்த டாஸ்மாக் கடை தமுமுக நிர்வாகிகளின் முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டது.

சேலம் கிழக்கு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் இரண்டு தியேட்டர் அருகில் உள்ள வேல்முருகன் லாட்ஜ்க்கு கீழே கடந்த ஒரு வார காலமாக அரசு (டாஸ்மாக்) மதுக்கடையை திறப்பதற்கு உண்டான ஆயத்த பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதையறிந்த அங்குள்ள மக்கள் இந்த செய்தியை அம்மாபேட்டை பகுதி தமுமுக தலைவர் A. முஸ்தபா அவர்களிடம் தெரிவித்தனர்.

உடனடியாக மமக மாவட்ட செயலாளர் S.நிசார், மாநிலசெயற்குழு உறுப்பினர் பாளை P.சுல்தான், மாநில வழக்கறிஞர் அணி து.செயலாளர் A.இம்தியாஸ்கான் மற்றும் உறுப்பினர்கள் சென்று இங்கு மதுகடை வைக்க அனுமதிக்ககூடாது என்று டவுன் காவல் ஆய்வாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதையடுத்து மாவட்ட DRO, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தபால் மூலமும் தொலைபேசி வாயிலாகவும் தகவல் கொடுத்து அரசு மதுக்கடையை இங்கு நடத்தினால் பிரச்சனை உருவாகும் எனவும்,திறந்தால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று டவுன் காவல் ஆய்வாளர் விளக்கியதையடுத்து, அந்த இடத்தில் டாஸ்மாக் திறக்கும் திட்டம் கைவிடப் பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...