எங்கே எங்கே என்று கேட்டீர்களே? இதோ பார்த்துக் கொள்ளுங்கள்!

ஜூலை 29, 2018 1003

சென்னை (29 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியானதில் உடன் பிறப்புகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திமுக தலைவர் சிகிச்சை பெறும் புகைப்படம் எங்கே? என்று சிலர் சமூக வலைத் தளங்களில் கேள்வி வைத்தனர். இதற்கு சிலர் பதிலளிக்கும் வகையில் இன்று வெளியான புகைப் படத்தைக் காட்டி இதோ பார்த்துக் கொள்ளுங்கள் என்று உடன்பிறப்புகள் பதிலடி கொடுத்து கொண்டு இருக்கின்றனர்.

கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு உள்ளார். இதில் சுவாச குழாய் இணைப்பு இன்றி இயல்பாக இருக்கிறார் கருணாநிதி. அதேபோல் அவருக்கு முறையாக மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் முதல்முறையாக புகைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் ''தலைவரோட புகைப்படம் வேணும்னு தேத்து யாரோ கேட்டாங்க.. இந்தா வந்துடுச்சு.. கலைஞர் நல்லார்க்கார்னு சொன்னா கேள்விகளின்றி நம்புறதுக்கு காரணம் இதுதான். இங்க ஒளிவு மறைவுலாம் கிடையாது'' என்று பலர் மகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...