BREAKING NEWS: உச்ச கட்ட பாதுகாப்பில் சென்னை!

ஜூலை 29, 2018 1777

சென்னை (29 ஜூலை 2018): சென்னை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பில் உள்ளது, மேலும் போலீசார் உசார் படுத்தப் பட்டுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்னும் சற்று நேரத்தில் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிடவுள்ளது​. காவேரி மருத்துவமனை அருகே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவிரி மருத்துவமனையில் கருணாநிதி குடும்பத்தார்​ குவிந்துள்ளனர். ​ராஜாத்தி அம்மாள், அழகிரி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு வருகை​ புரிந்துள்ளனர்.

மேலும் சென்னை நகர துணை ஆணையர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்குள் சென்றுள்ளனர். அனைத்து ஆயுதப்படை காவலர்களும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அனைத்து காவல் நிலைய காவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...