கருணாநிதி உடல் நிலை தற்போதைய அப்டேட்!

ஜூலை 30, 2018 871

சென்னை (30 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை காவேரி மருத்துவ மனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வரும் கருணா நிதியின் உடல் நிலை நேற்று சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதனால் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். இதையடுத்து அவரது உடல் நிலைக்குறித்து அனைவரும் கவலையுடன் விசாரித்தனர்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவித்தது. திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவும், திமுக தலைவர் உடல்நிலையில் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் இயல்பு நிலையில் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

மேலும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முக அழகிரி உள்ளிட்டோரும் கருணாநிதி நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துச் சென்றனர். தொண்டர்களும் அமைதி காத்து போலீஸாருக்கு ஒத்துழைத்து கலைந்து செல்ல வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கருணாநிதியை மருத்துவமனையில் சந்தித்தனர்.

இந்நிலையில், திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் நிருபர்களுக்கு இன்று இரவு அளித்த பேட்டியில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று இருந்தநிலவரப்படியே சீராக இருக்கிறது. காவேரி மருத்துவமனை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் கருணாநிதி இருக்கிறார். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...