இன்றைய முக்கிய செய்திகள்!

ஜூலை 30, 2018 830

படிக்கட்டில் பயணித்தால் ட்ரெயின் பாஸ் ரத்து.

கடந்த வாரம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த விபத்து தமிழகத்தையே அதிர வைத்தது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன், மின்சார ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்தால் மாணவர்களின் பாஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,

பரங்கிமலையில் படிக்கட்டில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராதது" என்று கூறினார்.

யமஹா- ஹோண்டாவுக்கு போட்டியாக புதிய பஜாஜ் பல்சர் பைக்

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லை. இது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் கூடிய புதிய பல்சர் என்எஸ் 160 பைக்கை பஜாஜ் நிறுவனம், வரும் அக்டோபர் மாதம் லான்ச் செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இதன் விலை தற்போது உள்ள ரூ.82 ஆயிரம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இறுதி விசாரணை

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இறுதி விசாரணை ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நடைபெறும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் அறிவித்துள்ளார்.

இதற்குமுன்னதாக வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய முடியாது தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

டிடிவி.தினகரனுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி போலீசில் மனு

சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி.தினகரனுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரிடம் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் மனு அளித்தார். நேற்று டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வெடித்ததை அடுத்து பாதுகாப்பு தரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக மதுரை கோயில் ஒன்றில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக 2006ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி பயிற்சி பள்ளி ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க,

இலங்கை அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டைமான், செந்தில் தொண்டைமான் , ராமகிருஷ்ணன் ஆகியோர் சென்னை வந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...