டிடிவி தினகரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

ஆகஸ்ட் 01, 2018 425

சென்னை (01 ஆக 2018): டிடிவி தினகரன் இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

கடந்த 29-ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் வீட்டில் நண்பகல் 12.30 மனியளவில் அவர் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது பெட்ரோல் குண்டு வீசப் பட்டது.

இதுதொடர்பாக புல்லட் பரிமளம் மீது புகார் கொடுக்கப் பட்டது. இதனை அடுத்து புல்லட் பரிமளத்தின் கார் டிரைவர் சுப்பையா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது தொகுதியான ஆர்.கே.நகருக்கு டி.டி.வி.தினகரன் செல்லும்போது அவருக்கு எதிராக சிலர் பிரச்னை ஏற்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவரது கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே டி.டி.வி. தினகரனின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஆகியோர் சென்னை தலைமை செயலகம் வந்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியை சந்தித்து மனு அளித்தனர். இதனை அடுத்து டி.டி.வி. தினகரன் வீட்டிற்கு 5 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...