கலைஞருக்காக யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் - ஸ்டாலின்!

ஆகஸ்ட் 01, 2018 874

சென்னை (01 ஆக 2018): கலைஞருக்காக யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார். நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் படி, அவர் உடல்நிலை இயல்புநிலையை அடைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர் விரைவில் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்புள்ளது. இந்தநிலையில் தற்போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நலனுடன் இருக்கிறார் என்றுள்ளார்.

இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. "தலைவா வா" என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண்போகவில்லை. தொண்டர்களின் உணர்ச்சிமிகு முழக்கங்கள் வீண்போகவில்லை!.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவுற்ற அதிர்ச்சியால் 21 திமுக தொண்டர்கள் உயிரிழந்தது துயரம் அளிக்கிறது. 21 பேர் உயிரை மாய்த்துக் கொண்டது வேதனையை தருகிறது. திமுக தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்

காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தலைவர் கருணாநிதியின் உடல்நல குறைவு சோகமும், தொண்டர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சோகமும் சேர்ந்து என்னை வாட்டுகிறது.

காவிரி மருத்துவமனை அறிக்கையில் உள்ளது போலவே தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார். திராவிட இயக்கம் தொண்டர்களால் கட்டப்பட்ட கோட்டை. அவர்கள் இல்லையென்றால் இந்த இரும்பு கோட்டையே இல்லை. அவர்கள் உயிரிழப்பு எனக்கு மட்டுமல்ல தலைவருக்கும் வருத்தத்தை உண்டாக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...