இலவச பிரியாணி கேட்டு கடை ஊழியர்கள் மீது தாக்குதல் - வீடியோ!

ஆகஸ்ட் 01, 2018

சென்னை (01 ஆக 2018): இலவசமாக பிரியாணி கேட்டு திமுக பிரமுகர்கள் பிரியாணி கடை ஊழியர்களை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

\விருகம்பாக்கம் பகுதியில் செயல்படும் ஒரு உணவகத்திற்கு கடந்த 28ம் தேதி இரவு 10 மணியளவில் 10 பேர் கொண்ட கும்பல் வந்து தங்களுக்கு பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், பிரியாணி தீர்ந்து விட்டதாக கடை ஊழியர்கள் கூற அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கி விட்டு சென்றதோடு, கடையின் இருந்த சில பொருட்களை உடைத்துவிட்டும் சென்றுள்ளனர்.

வீடியோ


இந்த சம்பவங்கள் அனைத்தும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தொடர்பாக கடை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளிக்க, விசாரணையில், விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜே ஊழியர்களை தாக்கியவர் என்பது தெரிய வந்தது. திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தை சாக்காக வைத்து அவர்கள் இதை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!