பிரியாணி கடையில் அடிதடியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி சஸ்பெண்டு!

August 01, 2018

சென்னை (01 ஆக 2018): சென்னையில் பிரியாணி கடையில் அடிதடியில் இரங்கிய திமுக நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளார்.

விருகம்பாக்கம் பகுதியில் செயல்படும் ஒரு உணவகத்திற்கு கடந்த 28ம் தேதி இரவு 10 மணியளவில் 10 பேர் கொண்ட கும்பல் வந்து தங்களுக்கு பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், பிரியாணி தீர்ந்து விட்டதாக கடை ஊழியர்கள் கூற அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கி விட்டு சென்றதோடு, கடையின் இருந்த சில பொருட்களை உடைத்துவிட்டும் சென்றுள்ளனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தொடர்பாக கடை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளிக்க, விசாரணையில், விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜே ஊழியர்களை தாக்கியவர் என்பது தெரிய வந்தது..

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உடனடியாக யுவரஜை கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!