அதிமுக எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்!

August 02, 2018

மதுரை (02 ஆக 2018): மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார்.

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஜீவா நகர் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸிற்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஏ.கே. போஸ், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதிவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!