கோவை கோர விபத்து - நிவாரணம் வழங்க மமக தமுமுக கோரிக்கை!

ஆகஸ்ட் 02, 2018 555

கோவை (02 ஆக 2018): கோவையில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மமக, தமுமுக கோரிக்கை வைத்துள்ளது.

கோவை சுந்தராபுரம் பெரியார் சிலை பகுதி அருகே, பேருந்துக்காக சாலையோரம் காத்திருந்த பொதுமக்கள் மீது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி, அதிவேகமாக வந்த ஆடி சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் நாராயணன், ஹம்சவேணி, ரங்கராஜ், குப்பாத்தாள், சுபாஷினி, ருக்மணி ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து சுந்தராபுரம் பகுதியிலுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள்

விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் பணமும், விபத்தில் ஏற்பட்டுள்ள அனைத்து நண்பர்களுக்கும் அரசு வேலையும் வழங்க வேண்டும். அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று நபர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை குண்டான முழு பொறுப்பு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்

இந்தப் பகுதியில் தினந்தோறும் விபத்துகள் அதிகமாகிக் கொண்டு வருகிறது லட்சக்கணக்கான மக்கள் இங்கு வசித்து வருகிறார்கள் இந்த பாதையை விரிவாக்க வேண்டும் . இந்த பாதையில் போலீஸ் பணியில் 24 மணி நேரம் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக மமக மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் முன் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை சந்தித்து இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறியும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...