செவி வழி சிகிச்சை புகழ் ஹீலர் பாஸ்கர் கைது!

ஆகஸ்ட் 02, 2018 1297

கோவை (02 ஆக 2018): செவி வழி சிகிச்சை என்ற பெயரில் பயிற்சி முகாம்கள் நடத்திவரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப் பட்டுள்ளார்.

மருத்துவரை காணாமல் சொந்தமாக சில பயிற்சிகள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளும் வழிமுறைகளை அளித்து வருபவர் ஹீலர் பாஸ்கர். கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவராக இவர் செயல் பட்டு வருகிறார்.

இந்நிலையில் இனிய சுகப் பிரசவம் ஒரு வரம் என்ற பெயரில் மருத்துவமனைக்கு செல்லாமல் பேறுகாலம் பார்க்க பயிற்சியளிப்பதாக கோவை புதூரில் உள்ள நிஷ்டை மையத்தில் பயிற்சி முகாம் நடப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

ஆனால் கோவையில் ஆகஸ்ட் 26ல் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்காக நடத்தப்படவிருந்த இந்த இலவச பயிற்சி முகாமை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தற்போது ஹீலர் பாஸ்கரை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மோசடி மற்றும் ஏமாற்ற முயற்சித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ஹீலர் பாஸ்கரை கோவை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...