தடுப்பூசி கூடாது என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை!

August 02, 2018

சென்னை (02 ஆக 2018); தடுப்பூசி கூடாது, வீட்டில் பிரசவம் பார்க்கலாம் என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் திருப்பூரில் யூ-டியூப் காணொளிகளை பார்த்து பெண் ஒருவருக்கு அவரது கணவரும், கணவரின் நண்பரும் பிரசவம் பார்த்த நிலையில் அந்த பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதேபோல தடுப்பூசி இயற்கைக்கு மாறனது என்றும் பலர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பூசி கூடாது, வீட்டில் பிரசவம் பார்க்கலாம் என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டால், அறிவியலுக்கு புறம்பாக செயல்படுவது, வதந்தியை பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளீன் கீழ் இவர்கள் கைது செய்யப் படுவார்கள் என்று சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை சாமி எச்சரித்துள்ளார்.

Search!