ஹீலர் பாஸ்கரின் அமைப்புக்கு தடை!

ஆகஸ்ட் 04, 2018 757

கோவை (04 ஆக 2018): ஹீலர் பாஸ்கரின் 'அனடோமிக் தெரபி ஃபவுண்டேஷன்’ அமைப்புக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஹீலர் பாஸ்கர், மருத்துவமனைக்குச் செல்லாமலும் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாமலும் அனைத்து வித நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று கூறி வந்தவர். இந்நிலையில் அவரது அமைப்பு, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப் பிரசவம் செய்து கொள்ள பயிற்சி வழங்குவதாக விளம்பரம் செய்திருந்தது. இதையடுத்து அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தது மாவட்ட சுகாதாரத் துறை.

இதையடுத்து ஹீலர் பாஸ்கர் போலீஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரின் தெரபி அமைப்பான ‘அனடோமிக் தெரபி ஃபவுண்டேஷன்’-க்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...